OMR விடைத்தாளில் மாற்றம் - டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு.!
tnpsc change omr answer sheet
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விடைத்தாளான ஓ.எம்.ஆர். விடைத்தாளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் ஒரு சில புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஒ.எம்.ஆர். விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணய இணையதளத்தில் www.tnpsc.gov.in "OMR Answer Sheet - Sample" என்ற தலைப்பின்கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால் நிரப்புவது தொடர்பாகவும், மேலும், பக்கம்-1ல் பகுதி-1ன் கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம்-2ல் பகுதி 1ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே. தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய ஓ.எம்.ஆர். விடைத்தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tnpsc change omr answer sheet