நிலக்கடலை பாலால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..!!
Benefits of Groundnut milk
இளம் வயதினர் முதல் அனைத்து வயதுடையவர்களும் உண்ணும் பொருட்களில் நிலக்கடலையும் ஒன்று. இந்த நிலக்கடையில் இருக்கும் புரதம், பாஸ்பிரஸ், நையாசின் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது.
இதுமட்டுமல்லாது நிலக்கடலையில் இருக்கும் மாங்கனீசு சத்துக்களின் மூலமாகவும், கால்சியம் சத்துக்களின் மூலமாகவும் உடலுக்கு அதிகளவு நன்மை கிடைக்கிறது. நிலக்கடலையில் பாலை சேர்த்து குடிக்கும் பட்சத்தில், நமது உடலுக்கு ஆரோக்கியம் அதிகளவு கிடைக்கிறது.
நிலக்கடலையில் இருக்கும் மருத்துவ குணத்தின் மூலமாக இரத்த கசிவை தடுக்கும் ஆற்றல் அதிகளவு உள்ளது. பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் இரத்த போக்கானது குறைக்கப்படும்.

நிலக்கடலையில் இருக்கும் பாஸ்பிரஸ், கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் ஈ, மற்றும் நியாசின் சத்துக்களின் மூலமாக மூளை சுறுசுறுப்பாக இயக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது எலும்புகளுக்கு தேவையான வலிமையை அளிக்கிறது.
நிலக்கடலையில் இருக்கும் நியாசினின் மூலமாக உடலில் இருக்கும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் விரைவில் குணமாகிறது. மேலும், கொப்புளங்கள் வராமல் பாதுகாக்கிறது. சருமத்திற்கு மெருகேற்றி நமது அழகை பராமரிக்கிறது.
English Summary
Benefits of Groundnut milk