மத்திய பிரதேசத்தில் சோகம்; வன்கொடுமைக்கு ஆளான 03 சிறுமிகள் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 03 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

பாலியல் குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் போலீஸ் ஸ்டேசன் அருகே பஸ்சிற்குள் வைத்து இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அடுத்தத்தக்க, ம.பி., மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் 05 வயது சிறுமி ஒருவரை திருமண விழாவில் குடிபோதையில் 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக தாக்கி இருந்தான்.  இதில் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் 28 தையல் போடப்பட்டது. அச்சிறுமி தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவ்வாறு கொடூரமா நடந்து கொண்ட  சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு பேரையும் தூக்கில் போட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில்   பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 03 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் சகோதரர் உறவுமுறை கொண்ட நபரே சிறுமியை வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போக்சோ சட்டம் மற்றும் பிஎன்எஸ்( பலாத்காரம்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

அத்துடன், கடந்த பிப்ரவரி 21 அன்று சிதி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 11வது படிக்கும் அந்த சிறுமியை இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.அந்த சிறுமி எழுதிய கடிதம் மூலம் இந்த கொடூரம் தெரியவந்தது. டாக்டர்கள் முயற்சி செய்தும் அச்சிறுமியை காப்பாற்ற முடியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்ததாக, ஷிவ்புரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியும், 06 வயது சிறுவனும் நகரில் தங்கி படித்து வந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் இரண்டு பேர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அந்தச் சிறுமி சொந்த கிராமத்திற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது உடலில் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான காயங்கள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரமும் சிறுமி தற்கொலைக்கு முயன்றதாகவும், மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில், மீண்டும் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.இந்த சம்பவங்கள் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Note;- தற்கொலை ஒருபோதும் எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்ள உங்களுக்கு உதவி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவுசெய்து பின்வரும் உதவி எண்களை அழைக்கவும்:

தமிழக சுகாதார சேவை உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050

இந்த எண்கள் மூலம், மனநல ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்கள்.

 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

03 girls were Abused in Madhya Pradesh commit suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->