தாய் மொழியை யாரும் விட்டு விடக்கூடாது - உள்துறை அமைச்சர் அமித்ஷா.!
Amitsha speech about mother tongue
நாட்டில் எந்த ஒரு மொழியையும் மக்கள் மறந்து விட கூடாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள சர்தார் பட்டேல் பள்ளியில் நடந்த நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 147 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது என்பது அவசியமை இல்லை. ஆனால், ஒரு மொழி கூட மறைந்து விட கூடாது.
நான் எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் கிடையாது. ஒருவர் இங்கிலீஷ், ஜெர்மன், ரஷ்ய அல்லது பிரெஞ்சு மொழியை கற்கலாம் அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் உங்களது தாய்மொழியை நீங்கள் விட்டு விடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளி குழந்தைகளிடம் அவர்களுடைய தாய் மொழியிலேயே பேசும்படி ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டார். அதேபோல் இளைஞர்களும் தங்களது தாய் மொழியை பாதுகாத்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
English Summary
Amitsha speech about mother tongue