நரபலி நடந்த வீட்டிற்கு படையெடுக்கும் மக்கள்.. மினி பஸ்ஸாக மாறிய ஆட்டோ.!
auto driver carry peoples to narapali house
கேரள மாநிலத்தில் சமீபத்தில் நரபலி நடந்த விஷயம் இந்தியாவையே உலுக்கியது. இதில் பத்தினம்திட்டா பகுதியில் இலத்தூர் அருகே மூன்று கிலோமீட்டர் தொலைவில் இந்த நரபலி நடந்த வீடு இருக்கின்றது.
இந்த பகுதியில் தற்போது முழுக்க முழுக்க போலீசார் குவிக்கப்பட்டு கடும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டை சுற்றியும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில், இந்த நரபலி நடந்த விஷயம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் நிறைய பேர் வந்து நரபலி நடந்த வீட்டை பார்க்க வேண்டும் என்று போலீசாருக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஏதோ சுற்றுலா தளத்திற்கு செல்வதைப் போல கூட்டம் கூட்டமாக லத்தூர் பகுதிக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ பிடித்து இந்த பகுதிக்கு வருகின்றனர். இத்தகைய நிலையில், ஒரு ஆட்டோ ஓட்டுநர் இந்த பகுதிக்கு என்று பிரத்தியேகமாக ஆட்டோவில் சீட்டு எழுதி ஒட்டி மக்களை ஏற்றிக்கொண்டு இந்த பகுதியில் கொண்டு சென்று விடுகிறார்.
ஒரு மினி பஸ் போல அந்த நபர் லத்தூருக்கும் நரபலி நடந்த வீட்டிற்கும் இடையில் செயல்பட்டு வருகிறார். இதனால், அவர் எக்கச்சக்க பணம் சம்பாதிப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
English Summary
auto driver carry peoples to narapali house