சாம்பியன்ஸ் டிராபி: சிக்சர் அடித்து தொடங்கிய ஹிட் மேன்!
Champions Trophy 2025 INDvNZ final Rohit Kuldeep Yadav mohammed shami
சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
தொடக்க வீரர்களாக வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினர். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய இவர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து நம்பிக்கைக்குரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
8வது ஓவரில், வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் வில் யங் விக்கெட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து, 11வது ஓவரில் குல்தீப் யாதவ் தனது முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திராவை கைப்பற்றினார். பின்னர் 13வது ஓவரில், கேப்டன் கேன் வில்லியம்சனையும் குல்தீப் வீழ்த்தி சிறப்பாக பந்துவீச்சை முன்னெடுத்தார்.
அதன்பிறகு, டாம் லாதாம் மற்றும் மிட்செல் ஜோடி அணியை கட்டுக்கோப்பாக முன்னேற்றினர். அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்ததும், டாம் லாதாம் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார்.
மிட்செல் மற்றும் பிலிப்ஸ் ரன்களை சேர்த்த நிலையில், பிலிப்ஸ் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். அதன் பின்னர், மிட்செல் மற்றும் பிரேஸ்வெல் ஜோடி அதிரடியாக விளையாடினர். அரைசதம் கடந்த மிட்செல் 63 ரன்னில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பிரேஸ்வெல் கடைசி வரை விளையாடி 51 ரன்கள் எடுத்ததன் மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தற்போதுவரை 12 ரன்கள் எடுத்துள்ளது. முதல் ஓவரிலேயே இந்திய கேப்டன் ரோஹித் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
English Summary
Champions Trophy 2025 INDvNZ final Rohit Kuldeep Yadav mohammed shami