ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு..! - Seithipunal
Seithipunal


​ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகயூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர், பாரமுல்லா, பட்காம், குப்வாரா, பெந்திபுரா, அனந்த்நாக் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

கடும் பனிப்பொழிவு காரணமாக விமானம் மற்றும் ரெயில் சேவை கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக, ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy snowfall in Kashmir


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->