ஹிஸ்புல்லா தலைவர் மரணம் எதிரொலி!...இஸ்ரேல், அமெரிக்காவிற்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் போராட்டம்! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையிடையே யாரும் எதிர்பாராத வகையில் லெபனானில் பயன்பாட்டில் உள்ள பேஜர்கள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என கருதப்பட்டது.

தொடர்ந்து நேற்று முன்தினம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் ஹசன் நஸ்ரல்லா  இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பட்காமில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் ராணுவம் கொன்றதை கண்டித்து  ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இந்த  பேரணியில் ஏராளமானோர் பங்கேற்று ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதே போல் ஸ்ரீநகரிலும்  ஹசனாபாத், ரெய்னாவாரி மற்றும் அஷாய்பா உள்ளிட்ட  பகுதிகளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருப்புக்கொடி ஏந்தி  இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு  எதிராக கண்டன கோசங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hezbollah leader death reverberates protest in jammu kashmir against Israel america


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->