கடினம்!!! இந்தியாவின் பீ டீமை வெல்வதே கடினமான ஒன்று! பாகிஸ்தான் குறித்து சுனில் கவாஸ்கர்.... - Seithipunal
Seithipunal


ஐ.சி.சி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வியுற்றதால் சாம்பியன் டிராபி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதுகுறித்துப் பாகிஸ்தான் அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் முன்னால் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் பீ டீமை வெல்லவே பாகிஸ்தான் புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர்:

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது," பாகிஸ்தான் அணியின் சமீபத்திய விளையாட்டு திட்டமானது எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி பார்க்கும் போது கொஞ்சம் கவலையாகத் தான் இருக்கிறது. தற்போது அவர்களுடைய விளையாட்டு திட்டத்தை வைத்து சொல்ல வேண்டுமெனில் நிச்சயமாக அவர்களுக்கு இந்தியாவின் பீ டீம் கூட சவாலாகவே இருக்கும். இந்தியாவின் சி அணியைப் பற்றி சொல்ல முடியாது. ஆனால் B அணிக்குப் பாகிஸ்தானை வீழ்த்த அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. இதில் மேலும் முகமது ரிஸ்வான் முதல் பந்தையே பவுண்டரி அடித்தார். உடனே பாகிஸ்தான் அணியின் அணுகுமுறை மாறுமோ என நினைத்தேன், ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பாகிஸ்தான் அணி:

மேலும் பாகிஸ்தான் அணியின் தனித்திறமை அவர்களது விளையாட்டைப் பார்க்கும் போது தெரியும். இந்த முறை அப்படி எதுவும் தெரியவில்லை. பாகிஸ்தான் அணியில் இளமையான திறமையான வீரர்கள் ஆரம்ப காலத்தைப் போல இணையாமல் இருப்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி இருக்கிறது. அதன் மூலம் சிறப்பாக விளையாடும் வீரர்களைத் தேர்வு செய்வர் என எதிர்பார்க்கிறேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தரமான இளம் வீரர்களை இந்திய அணி உருவாக்குவதைப் பார்த்திருப்பீர்கள். ஐ.பி.எல் ரஞ்சி டிராஃபியில் விளையாடுவதன் காரணமாகவே அவர்களுக்கு நல்ல வீரர்கள் கிடைக்கிறார்கள். எனவே அவர்களைப் போல பாகிஸ்தானும் நல்ல வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும்" என அவர் தனது கருத்துகளைப் பாகிஸ்தான் குறித்து தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is difficult to beat Indias B team Sunil Gavaskar on Pakistan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->