அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டுவது உறுதி : கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் முடிவடைத்துள்ளதாகவும், உரிய அனுமதி கிடைத்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இதையடுத்து அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. எனினும், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பதால், அணை கட்டக்கூடாது என்பதில் அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்தநிலையில் கர்நாடக அரசு சார்பில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக உத்தேசித்துள்ள திட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது என்பதையும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

 இந்தநிலையில் கர்நாடக சட்டசபையில் 2025-26 நிதி ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட், இன்று தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு விதான சவுதாவில் பட்ஜெட்டை முதல் மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து இந்த பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். அப்போது மேலும், மேகதாது திட்டம் குறித்தும் பேசினார். 

தொடர்ந்து சித்தராமையா கூறியதாவது:- மேகதாது நீர்தேக்கத்திட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும்  மேலும் மத்திய அரசின் தகுதி வாய்ந்த அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka Budget 2019: Mekedatu dam will be built after getting clearance


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->