நிபா வைரஸ் - சபரிமலை பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்.!
kerala high court ask state govt publish issue guidleness of nipha virus for devotes
நிபா வைரஸ் - சபரிமலை பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்.!
நமது அண்டை மாநிலமான கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மத்திய குழு கேரளாவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கேரளா உயர்நீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
"அதாவது, "திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு ஆணையர், சுகாதார செயலாளருடன் ஆலோசனை நடத்தி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட முடிவு எடுக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு கேரள மாதத்தின் ஐந்து நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்படும். அந்த வகையில் நாளை நடை திறக்கப்பட உள்ள நிலையில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary
kerala high court ask state govt publish issue guidleness of nipha virus for devotes