பாலியல் புகாரில் காங்கிரஸ் எம்எல்ஏ தலைமறைவு - பங்கம் செய்த கம்னியூஸ்ட்!   - Seithipunal
Seithipunal


கேரளாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தலைமறைவாக உள்ள நிலையில், எம்.எல்ஏ., குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று, கம்னியூஸ்ட் மாணவர் அமைப்பு போஸ்டர் ஒட்டி பங்கம் செய்துள்ளனர்.

கேரளா மாநிலம், பெரும்பாவூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளி. இவர் மீது பள்ளி ஆசிரியை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். மேலும், 30 லட்சம் வரை ஆசிரியைக்கு எம்எல்ஏ பேரம் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தில் போலீசார் காலதாமதமாக வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது. இந்த விவகாரத்தை பாஜக, ஆளும் கம்னியூஸ்ட் கையிலெடுக்கவே, பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது. 

போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், கைது நடவடிக்கைக்கு பயந்து எம்.எல்.ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளி தலைமைறைவாக உள்ளதாக அம்மாநில செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை கண்டுப்பிடித்து கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று, கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில் 101 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala mla stirred poster


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->