மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்.. ஆளும் கட்சி முன்னிலை.. பாஜக தொடர்ந்து பின்னடைவு.! - Seithipunal
Seithipunal


நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய 3 மாநிலங்களின் 5 ஆண்டுகால ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், இதனையடுத்து 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலிலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதில், 60 தொகுதிகளை கொண்ட மேகலாயா மாநிலத்தில் 59 தொகுதிகளில் மட்டும் கடந்த 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சோகியாங் எனும் சட்டசபை தொகுதியில் பிரதான கட்சி வேட்பாளர் ஒருவர் இறந்ததால் அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில், மேகாலயாவில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பதிவான வாக்குகள் இன்று (மார்ச் 2-ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

மேகலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி), பாஜக, காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ்,  ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் தற்போதைய நிலவரப்படி ஆளும் தேசிய மக்கள் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

மேகலயா மாநில சட்டப்பேரவை தேர்தல் தற்போதைய முன்னிலை நிலவரம்

என்பிபி - 23

பாஜக - 7

காங். - 4

மற்றவை - 25


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meghalaya Assembly election vote counting NPP lead


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->