நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்.. 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்.!
Nagaland and Meghalaya Assembly election 11 clock stats
நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.
நாகாலாந்து, மேகாலயா ஆகிய 2 மாநிலத்தின் 5 ஆண்டுகால பதவிக்காலம் முறையே மார்ச் 12, மார்ச் 15 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. இதனையடுத்து 2 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (பிப்ரவரி 27-ம் தேதி) ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. மேலும், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் 60 தொகுதிகளை கொண்ட நாகலாந்து மாநிலத்தில் 59 தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில், சோகியாங் எனும் சட்டசபை தொகுதியில் பிரதான கட்சி வேட்பாளர் ஒருவர் இறந்ததால் அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாகலாந்து மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 11 மணி நிலவரப்படி நாகலாந்து மாநிலத்தில் 35.76% வாக்கு பதிவாகியுள்ளது.
அதேபோல், மேகாலயா மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 11 மணி நிலவரப்படி நாகலாந்து மாநிலத்தில் 26.07% வாக்கு பதிவாகியுள்ளது.
English Summary
Nagaland and Meghalaya Assembly election 11 clock stats