வாட்ஸ் அப் செயலி உதவியுடன், ரூ.200 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது; நிர்மலா சீதாராமன்..!
Nirmala Sitharaman says that tax evasion worth Rs 200 crore was detected with the help of WhatsApp app
வாட்ஸ் அப் செயலி உதவியுடன், கிரிப்டோ கரன்சி தொடர்பான கணக்கில் வராத கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்ட ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டதாக லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கடந்த 13-ஆம் தேதி லோக்சபாவில் புதிய வருமான வரி மசோதா 2025 தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வரி ஏய்ப்பையும், நிதி மோசடியையும் தடுக்க வரி அதிகாரிகளுக்கு டிஜிட்டல் ஆவணங்களை அணுக அனுமதிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மொபைல்போனில் ' என்கிரைப்டட்' செய்திகள் மூலம் ரூ.250 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும், வாட்ஸ்-அப் செயலியில் இருந்த செய்திகள் மூலம், கணக்கில் வராத கிரிப்டோ பணம் குறித்த தகவல் கிடைத்ததாகவும், கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்க வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் உதவியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
அடிக்கடி செல்லும் இடங்களை கூகுள் மேப் செயலி கண்டுபிடித்து கொடுத்ததாகவும், இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஆய்வு செய்த போது, பினாமி சொத்துகளின் உரிமையாளர் குறித்த விவரங்கள் தெரியவந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதுபோன்ற நடவடிக்கைகள், புதிய தொழில்நுட்பத்துடன் வரி அமலாக்கம் குறித்த நடவடிக்கைகள் புதுப்பித்த நிலையில் வைத்து இருக்க உதவியதாகவும், கிரிப்டோகரன்சிகள் போன்ற சொத்துக்கள் கவனிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த மசோதாவானது, வாட்ஸ்அப், டெலிகிராம், இமெயில் போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களை அணுக அதிகாரம் அளிக்கிறதாகவும், நிதி பரிமாற்றங்களை மறைக்க பயன்படுத்தப்படும் மென்பொருள் மற்றும் சர்வர்களையும் அதிகாரிகளால் அணுக முடியும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nirmala Sitharaman says that tax evasion worth Rs 200 crore was detected with the help of WhatsApp app