கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் : எச்சரிக்கும் இந்திய வானிலை ஆய்வு விஞ்ஞானி.!
over sun heat in india march
இந்தியாவின் பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மார்ச் மாதம் வெயில் இருந்தது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மார்ச் மாதத்தில் வெயில் வாட்டி வதைத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் சராசரி வெயில் முறியடிக்கப்பட்டுள்ளது. சராசரி வெயில் 91.56 டிகிரி ஆகும். கடந்த 2010-ஆம் ஆண்டில் மார்ச் மாத சராசரி வெயில் 91.41 டிகிரியாக இருந்தது.
வடமேற்கு இந்திய பகுதியில் அதிகமான வெப்பமும், மத்திய இந்திய பகுதியில் அதற்கு அடுத்தபடியாக வெப்பம் அதிகமாக இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு விஞ்ஞானி ராஜேந்திர ஜெனா மணி தெரிவித்ததாவது,
"உலக அளவில் ஒப்பிடுகையில் கடந்த 20 ஆண்டுகள் வெப்பமான வருடமாக உள்ளன. காலநிலை மாற்றம் கடுமையான வானிலை தீவிரத்தையும் கால அளவையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. மார்ச் மாதத்தில் இரண்டாவது பகுதியில் நாட்டின் பல இடங்களில் வெப்பநிலை அதிக அளவில் இருந்தது. ஆனால் குறைந்த அளவு மழை பெய்தது.
71% மழை பற்றாக்குறை ஏற்பட்டது. 8.9 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. 1901-க்கு பிறகு இது மூன்றாவது குறைவான பாதிப்பாகும்.
வடக்கு பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் டெல்லி, அரியானா போன்ற இடங்களிலும் மார்ச் மாதத்தில் வழக்கத்தைவிட அதிகமான வெயில் பதிவாகியுள்ளது". என்று ராஜேந்திர ஜெனா மணி தெரிவித்துள்ளார்.
English Summary
over sun heat in india march