பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருது பெரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் விருது பட்டியல்..! - Seithipunal
Seithipunal


2025ம் ஆண்டுக்கான இந்தியாவின் உயிரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. 07 பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ உட்பட 139 பத்ம விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 

அதன்படி, இந்தாண்டில் பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா சந்திரகுமார் மற்றும் தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி செட்டிக்கு பத்மபூஷன் விருது,  அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த தவில் வித்வான் தட்சிணாமூர்த்தி மற்றும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருது

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங்

பிரேசிலைச் சேர்ந்த ஹிந்து மதத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் ஜோனஸ் மசட்டி

நாவல் ஆசிரியர் ஜெக்தீஷ் ஜோஷிலா

புதுச்சேரியைச் சேர்ந்த தவில் வித்வான் தட்சிணாமூர்த்தி

டில்லியைச் சேர்ந்த டாக்டர் நீரஜ் பாத்லா

குவைத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஷாகியா அல் ஷபா

சிக்கிமைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகர் நரேன் குரூங்

ஆன்மிக பாடகர் பேரு சிங் சவுகான்

நாகாலாந்தை சேர்ந்த விவசாயி ஹங்திங்

பீஹாரைச் சேர்ந்த பத்திரிகையாளர் பீம் சிங்பாவேஷ்

மஹாராஷ்டிராவின் மாருதி புஜன்க்ராவ் சிதம்பள்ளி

கர்நாடகாவின் பொம்மலாட்ட கலைஞர் பிம்வ்வா டோடாபாலப்பா

ம.பி.,யின் கார்கோன் நகரைச் சேர்ந்த சாலி ஹோல்கர்

ராஜஸ்தானைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி பதூல் பேகம்

தமிழகத்தைச் சேர்ந்த பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்

மேற்கு வங்கத்தை சேர்ந்த தக் இசைக் கலைஞர் கோகுல சந்திர தாஸ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

வீர தீர விருது

படை வீரர்கள் 93 பேருக்கு வீர தீர விருது வழங்கப்படுகின்றன

13 பேருக்கு உயிரிழப்புக்கு பிறகு விருது வழங்கப்படுகிறது.
02 பேருக்கு  கீர்த்தி சக்ரா பதக்கம்
14 பேருக்கு சவுரிய சக்ரா பதக்கம்
66 பேருக்கு சேனா பதக்கம்
02 பேருக்கு  நவு சேனா பதக்கம்
08 பேருக்கு வாயுசேனா பதக்கம்
30 பேருக்கு பரம்வஷிட் சேவா பதக்கம்
05 பேருக்கு உத்தம் யுத் சேவா பதக்கம்
57 பேருக்கு அதி விஷிஸ்ட் சேவா பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Padma Bhushan and Padma Shri awardees from Tamil Nadu and the list of awards


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->