மகா கும்பமேளாவை கேலி செய்தவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்..பிரதமர் மோடி கடும் தாக்கு!
People will not forgive those who mocked the Maha Kumbh. Prime Minister Narendra Modi
காட்டாட்சி தலைவர்கள் மகா கும்பமேளாவையும், இந்து மதத்தையும் கேலி செய்தனர் என்றும் அவர்களை பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
மகா கும்பமேளா குறித்து முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவிக்கையில் "மகா கும்பமேளா அர்த்தமற்றது" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்க்கு லாலு பிரசாத் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் சென்றிருந்தார். அவர் பேசும்போது கூறியதாவது:- பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவை மறைமுகமாக விமர்சித்தார்.தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி காட்டாட்சி தலைவர்கள் மகா கும்பமேளாவையும், இந்து மதத்தையும் கேலி செய்தனர் என்றும் அவர்களை பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் "விவசாயிகளுக்கான 19-வது தவணை நிதியை விடுவித்த பிரதமர் மோடி, என்டிஏ அரசு விவசாயிகள் நலன் மற்றும் பீகார் மக்கள் வளர்ச்சிகாக உறுதிப்பூண்டுள்ளது என்றும் என்டிஏ அரசு காரணமாக பால் உற்பத்தி இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என பேசினார்.
மேலும் தாமரை விதைக்கான (makhana) வாரியம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக இதன்மூலம் பீகார் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் 4 புதிய பாலங்கள் கட்ட 1,100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பொருளாதார வளர்ச்சிக்காக இணைப்புகளை மேம்படுத்த இந்த பாலங்கள் கட்டப்படுகிறது என பேசினார்.
English Summary
People will not forgive those who mocked the Maha Kumbh. Prime Minister Narendra Modi