மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள்..டெல்லி மக்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!
Register valuable votes. PM Modi invites people of Delhi
"டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் இங்குள்ள வாக்காளர்கள் இந்த ஜனநாயகத் திருவிழாவில் முழு ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார் .
டெல்லி சட்டசபையின் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றுவருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது . இந்தநிலையில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.மேலும் பாதுகாப்பு பணிகளை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர் இதனால் தேர்தல் களம் அனல்பறக்கிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, "டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் இங்குள்ள வாக்காளர்கள் இந்த ஜனநாயகத் திருவிழாவில் முழு ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் . மேலும் இந்த சந்தர்ப்பத்தில், முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் தலைமுறையினருக்கும் எனது சிறப்பு வாழ்த்துக்கள் என்றும் நினைவில் கொள்ளுங்கள்- முதலில் வாக்கு, பின்னர் புத்துணர்ச்சி" என்று பிரதமர் மோடி அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
English Summary
Register valuable votes. PM Modi invites people of Delhi