தீர்ந்து போன ரசகுல்லா - திருமண நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சம்ஷாபாத் பகுதியில் நேற்று முன் தினம் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்திற்கு வந்திருந்த உறவினர்கள், அப்பகுதி மக்கள் பங்கேற்றனர். 

அந்த இரவு உணவு விருந்தில் பல்வேறு உணவு வகைகள், ரசகுல்லா உள்பட இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன. அப்போது, ரசகுல்லா இனிப்பு தீர்ந்துவிட்டதனால், திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரு தரப்பினர் வாக்குவாதம் செய்தனர். 

இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறி இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில், ஆறு பேர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples injured for clash in uttar pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->