அலோபதி மருத்துவமுறையை விமர்சிப்பது ஏன் பாபா ராம்தேவ்-க்கு - உச்சநீதிமன்றம் கேள்வி.! - Seithipunal
Seithipunal


கொரோனா 2ஆவது அலை உச்சத்தில் இருந்த போது, ஆக்சிஜன் கிடைக்காமலோ அல்லது சிகிச்சை கிடைகாமலோ அல்ல, அலோபதி மருத்துவத்தால் தான் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர் என்று கருத்து தெரிவித்து பாபா ராம்தேவ் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், பணத்தை பிடுங்கும் முறைதான் அலலோபதி என கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து பாபா ராம்தேவின் கருத்துக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்குவந்தது.

அபோது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, அலோபதி மருத்துவமுறையை பாபா ராம்தேவ் விமர்சிப்பது ஏன் என்று கேள்விஎழுப்பியது. மேலும், அலோபதி மருத்துவமுறைகளை விட ஆயுர்வேதமருந்துகள் மற்றும் மருத்துவமுறைதான் சிறந்தது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.

மருத்துவர்கள், மருத்துவகட்டமைப்பை பாபா ராம்தேவ் விமர்சிப்பது என்பது பொதுமக்களின் சுகாதாரநலனை பாதிக்கக்கூடியது என்று கூறிய நீதிபதிகள், பாபா ராம்தேவ் இதர மருத்துவமுறைகள் குறித்து அவதூறுபரப்பக்கூடாது என்று கூறினர். மேலும் இந்த வழக்கில் மத்தியஅரசும் பாபா ராம்தேவும்பதிலளிக்கஉத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court question to baba ramdev


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->