2026-ம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் இலக்கு..மத்திய மந்திரி தகவல்!
Target of 20 per cent ethanol along with petrol by 2026 Central Minister Information!
"2026-ம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதை 20 சதவீதத்துக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஹர்தீப் எஸ்.பூரி தெரிவித்துள்ளார்.
'அட்வான்டேஜ் அசாம் 2.0' என்ற வர்த்தக மாநாடு அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில், நடந்தது. அதில், பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் எஸ்.பூரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
"2026-ம் ஆண்டுக்குள், பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயித்து இருந்தோம் என்றும் ஆனால், 19.6 சதவீத கலப்பை ஏற்கனவே எட்டி விட்டோம் என கூறினார்.மேலும் அடுத்த மாதம், 20 சதவீத கலப்பை எட்டி விடுவோம் என்றும் எத்தனால் கலப்பை 20 சதவீதத்துக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றும் அதற்காக 'நிதி ஆயோக்' குழு ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது என அப்போது தெரிவித்தார் .
மேலும் 1,700 கோடி லிட்டர் கலக்கும் அளவுக்கு இந்தியாவுக்கு திறன் உள்ளது என்று கூறிய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் எஸ்.பூரி ஏற்கனவே 1,500 கோடி லிட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பல்வேறுவகை எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா 15 ஆயிரம் கோடி டாலர் செலவழித்து வருகிறது என்றும் அதே சமயத்தில், பசுமை ஹைட்ரஜன் மீது நாம் அவ்வளவாக கவனம் செலுத்தாமல் இருக்கிறோம் என பேசினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்,தற்போது, பசுமை ஹைட்ரஜன் விலை 4.5 டாலராக உள்ளது என்றும் அதை 2.5 டாலருக்கு கொண்டு வர முடிந்தால், பெரும் புரட்சியே ஏற்படும் என்றும் நாம் வழக்கமான எரிபொருளுக்கு பதிலாக, பசுமை ஹைட்ரஜனுக்கு மாறி விடலாம் என பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் எஸ்.பூரி ."இவ்வாறு அவர் பேசினார்.
English Summary
Target of 20 per cent ethanol along with petrol by 2026 Central Minister Information!