இந்திய பார் கவுன்சிலின் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் மார்ச்சு 02 இல்..!
The Bar Council of India will hold elections for the posts of Chairman and Vice Chairman on March 2
இந்திய பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் மார்ச் 02-ந்தேதி நடைபெறும் என, தலைவர் மனன் குமார் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும். மேலும், மார்ச் 01-ந்தேதி வரை வேட்பு மனுவை திரும்பப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பார் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் பதவிக்காலம் இரண்டு வருடம் ஆகும்.
மூத்த வழக்கறிஞரான மிஷ்ரா, மாநிலங்களவை எம்.பி.யாகவும் உள்ளார். கடந்த ஆறுமுறை இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக இருக்கும் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் கடந்த மூன்று வருடங்களாக அப்பதவியில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The Bar Council of India will hold elections for the posts of Chairman and Vice Chairman on March 2