இரவு வேளையில் நகரம் ஒளிர்கிறது...கும்பமேளா புகைப்படங்கள் வெளியிட்ட நாசா! - Seithipunal
Seithipunal


2025ம் ஆண்டு மகா கும்பமேளா நிகழ்ச்சியின் நடந்து வரும் நிலையில் இரவில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலைய நாசா வெளியிட்டுள்ளது. 
 
  கடந்த 13-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா தொடங்கியது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் பிரயாக்ராஜ் நகரில் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் முதல் நாளில் 1 கோடி பேர் நீராடினர்.

 45 நாட்களுக்கு நடைபெறும் கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 26-ந்தேதி வரை நடைபெறும் இந்த கும்பமேளாவிற்கு இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலைய (நாசா) விண்வெளி வீரரான டான் பெட்டிட் என்பவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து நாசா வீரர் வெளியிட்ட பதிவில், '2025ம் ஆண்டு மகா கும்பமேளா நிகழ்ச்சியின் நடந்து வருகிறது என்றும்  இது இரவில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுத்த புகைப்படம் என தெரிவித்துள்ளார். மேலும் உலகில் அதிகளவில் மனிதர்கள் கூடும் இந்த விழாவை முன்னிட்டு, இரவு வேளையில் நகரம் ஒளிர்கிறது' என அவர் மூக வலைதளங்களில் குறிப்பிட்டு இருந்தார்.இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மகா கும்பமேளா நிகழ்ச்சி சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The city lights up at night NASA releases Kumbh Mela photos


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->