மலக்குழி மரணங்கள்: தமிழகம் முதலிடம்! அதிர்ச்சி புள்ளி விவரம்!
The plight of humans picking up human waste
இப்போதிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது பாதுகாப்பற்ற முறையில் சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகள் சுத்தம் செய்யப்படுவதுதான், என்ற கருத்தை மத்திய அமைச்சகம் கடந்த காலங்களில் அழுத்தமாக தெரிவித்துள்ளது.
அதாவது பாதுகாப்பற்ற முறையில் சாக்கடைகள், செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்வதனால் ஏற்படும் விபத்துகளில் இறப்புகள் பதிவாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது.

புள்ளி விவரங்கள்:
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் "மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும்" நடைமுறையில், அதிக பேர் இருந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.
இதில் மத்திய சமூக நீதித்துறையின் புள்ளி விவரங்களின்படி, 2019 ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இரண்டாவது இடமாக மகாராஷ்டிராவில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். ஹரியானா மூன்றாவது இடத்தில் 51பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இம்மாநிலங்களில் தலா 49 பேர் உயிரிழந்துள்ளனர் என புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.
English Summary
The plight of humans picking up human waste