அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 3 பேர் பலி..!
three peoples died for fire accident at apartment in gujarat
ராஜ்கோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் 150 ரிங் சாலையில் அமைந்துள்ள அட்லான்டிஸ் என்ற 12 மாடி குடியிருப்பு கட்டடத்தின் 6 ஆவது மாடியில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து குடியிருப்பு பகுதியில் சிக்கிய 50 பேரை பத்திரமாக மீட்க்கப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக மூன்று பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
three peoples died for fire accident at apartment in gujarat