போலி தரிசன டிக்கெட் - பக்தர்களுக்கு தேவஸ்தானம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இடைத்தரகர்களின் மூலம் தரிசன டிக்கெட்டை பெற்று சாமி தரிசனம் செய்ய செல்கின்றனர். அது போலி டிக்கெட் ஆக இருப்பதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில், அவற்றை தடுப்பதற்காக தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த தமிழகத்தைச் சேர்ந்த நெட் சென்டர் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி வெங்கடேஸ்வரசாமி பக்தர்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட் https://ttdevasthanams.ap.gov.in என்ற முகவரியில் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டை எண், முகவரியுடன் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இடைத்தரகர்களை நாடுவதன் மூலம் பக்தர்கள் தங்களின் தரிசன டிக்கெட்டுகளை இழக்க வேண்டாம். 

திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறது. பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நாடி சிரமப்பட வேண்டாம். பக்தர்கள் பெறும் டிக்கெட்டுகள் தரிசனத்துக்கு செல்வதற்கு முன் தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்களால் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும். 

அப்போது பக்தர்கள் பெற்ற தரிசன டிக்கெட்டுகள் போலியானது எனத் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பக்தர்கள் தேவையில்லாத சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். சாமி தரிசன டிக்கெட்டுகள் மற்றும் சேவை டிக்கெட்டுகளை வழங்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupathi devasthanam warning to devotees for duplicate ticket


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->