பட்டியலினத்தவர் திருப்பதி கோயிலுக்கு செல்லக் கூடாது என தீண்டாமையை மீண்டும் கொண்டு வருவார்கள் - ஜெகன் மோகன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


திருப்பதி லைட்டில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியாயி ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணை செய்ய சிறப்பு விசாரணை குழு ஒன்றை அம்மாநில அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், திருப்பதி கோயிலுக்கு செல்ல அனுமதி மருத்துள்ளதாக, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் பேட்டியில், "ஜடந்த 5 ஆண்டுகள் முதலமைச்சராக ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சாத்திய நான், எதற்காக மாற்று மத நபர்கள் போல் கையெழுத்திட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டும். 

என்னை கோயிலுக்கு செல்ல விடாமல் தடுக்கும் சதி இது. பட்டியலினத்தவர் கூட கோயிலுக்கு செல்லக் கூடாது என நாளை தீண்டாமையை மீண்டும் கொண்டு வருவார்கள்.

சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 14 முறையும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 முறை நெய் தரம் இல்லை என டேங்கர்கள் திருப்பி அனுப்பப்பட்டன. 

இது வழக்கமாக தேவஸ்தானத்தில் உள்ள நடைமுறைதான்.  தற்பொழுது இதற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்” என்று முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupathi issue YS JaganMohan


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->