பிரியங்க் கார்கே ஏன் பதவி விலகணும்..? பா.ஜ.க விடம் கேள்வி எழுப்பிய கர்நாடகா முதல்வர்..!
Why should Priyank Kharge resign Karnataka Chief Minister Siddaramaiah questions
இளம் ஒப்பந்ததாரர் தற்கொலை சம்பவத்தில் அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு தொடர்பிருப்பதாக எந்த ஆதாரமும் இல்லாத போது, அவர் ஏன் பதவி விலக வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் சச்சின் பஞ்சால் என்ற இளம் ஒப்பந்ததாரர் கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு காரணமான ரவுடி, அமைச்சரும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கேவுக்கு நெருக்கமானவன் என்று குறிப்பிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
குறித்த சம்பவத்திற்கு பிரியங்க் கார்கேவுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டி வரும் பா.ஜ.க அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கையம் விடுத்துள்ளது.
இந்த நிலையில், இது பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது,சச்சின் பஞ்சால் தற்கொலை தொடர்பான விவகாரத்தில் பா.ஜ.க, எந்த ஆதாரத்தையும் காண்பிக்கவில்லை. சச்சின் பஞ்சால் எழுதிய கடித்தில் பிரியங்க் கார்கேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அப்படியிருக்கும் போது, அவர் ஏன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வழக்கை சி.ஐ.டி., போலீசாரி தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்கள் அறிக்கை சமர்ப்பிக்கட்டும். அப்போது தான் யார் குற்றவாளி என்பது தெரிய வரும். பா.ஜ.க, ஆட்சியின் போது ஒரு வழக்கு கூட சி.பி.ஐ., விசாரணைக்கு கொடுக்கவில்லை. அவர்களுக்கு எங்களின் போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்றும், பா.ஜ.க வுக்கு என்ன தார்மீக அதிகாரம் இருக்கிறது? என்று கூறியுள்ளார்.
English Summary
Why should Priyank Kharge resign Karnataka Chief Minister Siddaramaiah questions