அடுத்த அதிர்ச்சி! எடப்பாடி பழனிசாமி எதிராக புதிய வழக்கு! விரைவில் விசாரணை!
ADMK EPS Chennai HC Division new case
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி என்பவர்கள் தங்களை அதிமுக உறுப்பினர்கள் என்று கூறி இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.
அதில், "அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பின் தொடர் தோல்விகளால் மக்கள் மத்தியில் அதிமுக நம்பிக்கை இழந்து வருகிறது, திருத்தப்பட்ட விதிகள் தொண்டர்களின் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் தரப்பின் கருத்துக்களையும் கேட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
ADMK EPS Chennai HC Division new case