துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகர்! அதிமுகவினர் மீது வழக்கு - கொந்தளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!
ADMK EPS Condemn DMK Some shoking infe AU Case
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகர், கடந்த அதிமுக ஆட்சியில் 2018 ஆம் ஆண்டு தொழிலதிபரை கடத்தி மிரட்டி பணம் பறித்த வழக்கில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மேலும் இந்த வழக்கில் ஞானசேகர் மனைவிகள், தாய் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளதாக அப்போது வெளியான செய்தித்தாள் ஆதாரங்களை அதிமுக ஐடி விங்க் தலைவர் கோவை சத்யன் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, சென்னையில் பிரபல வணிக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் யார் அந்த SIR என்ற கேள்வியுடன், Save Our Daughters என்ற விழிப்புணர்வு வாசகத்துடன்,
சென்னையில் பிரபல வணிக வளாகம் ஒன்றில் மக்களிடையே மிகவும் அமைதியாக, ஒழுக்கத்துடன் கவன ஈர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக ஐடி விங்க் இளைஞர்களை கண்டு பதற்றம் அடைந்த விளம்பர மாடல் ஸ்டாலின் அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு பதிந்திருப்பதற்கு எனது கடும் கண்டனம்.
தேசிய ஊடகம் வரை கவனத்தை ஈர்த்து, பொதுமக்களின் பேராதரவை அஇஅதிமுக-வின் போராட்டங்கள் பெறுவதும்,
இந்த விடியா திமுக அரசின் பொய்முகங்கள் தோலுரிவதும், பொய் விளம்பர மாடல் ஸ்டாலினின் அரசுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த வழக்கு குறித்த ஒரு முக்கியமான கேள்வியையும், பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும்,
பொதுமக்கள் கூடும் இடத்தில், எவ்வித இடையூறும் இன்றி சமூக அக்கறை கொண்டு அறவழியில் மேற்கொண்ட அதிமுக ஐடி விங்க் இளைஞர்களை வழக்குப் போட்டு, கைது செய்து அடக்கிவிடலாம் என்று விளம்பர மாடல் ஸ்டாலினின் திமுக அரசு எத்தனிப்பது, கண்டிக்கத்தக்கது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்ட இவ்வழக்கை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்ம்.
English Summary
ADMK EPS Condemn DMK Some shoking infe AU Case