விஜய் பாணியில் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன செய்தி! 2026 சம்பவம் உறுதி!
ADMK EPS Speech in salem DMK MK Stalin Udhay TVK Vijay
சேலத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற மக்களின் தலைவர்கள்; அவர்கள் வாழ்ந்ததையும் மறைந்ததையும் மக்கள் மகிழ்ச்சியோடு நினைவுகூருகிறார்கள்.
திமுக தற்போது குடும்பக் கட்சியாகவும், கார்ப்பரேட் நிறுவனமாகவும் மாறிவிட்டது. திமுகவில் குடும்ப உறுப்பினர்களே அதிகாரத்தைத் தாங்குகின்றனர். திமுகவின் அரசியல் மற்றும் அதிகாரத்தில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே முன்னிலை வகிக்கிறார்கள்.
கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு ஸ்டாலின் முதலமைச்சராகிய நிலையில், திமுகவில் பல மூத்த நிர்வாகிகள் இருந்தாலும், உதயநிதி மட்டுமே துணை முதலமைச்சர் பதவிக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
ஸ்டாலினுடன் போராடிய மூத்த நிர்வாகிகள் மிசா சிறையில் சித்திரவதை அனுபவித்தபோதிலும், அவர்களை இப்போது கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது.
திமுகவில் ஜனநாயக முறைகள் பின்பற்றப்படவில்லை; மூத்த நிர்வாகிகளை புறக்கணித்து உதயநிதிக்கு பதவி என தற்போது சர்வாதிகாரம் நிலவுகிறது; ஸ்டாலின் அரசர் போலும், உதயநிதி இளவரசர் போலும் நடத்தப்படுகிறார்கள்.
அதிமுகவை அழிக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவுகள் நிறைவேறாது. மக்கள் மீண்டும் மன்னராட்சியை அனுமதிக்க மாட்டார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்" என்று தெரிவித்தார்.
English Summary
ADMK EPS Speech in salem DMK MK Stalin Udhay TVK Vijay