அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர் யார்.? வெளியான பெயர் பட்டியல்.!!
admk next avai thalaivar
அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் காலமானதை அடுத்து, அவைத்தலைவர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவியை உருவாக்கினார். இதையடுத்து, அதிமுகவில் அவைத்தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. அந்த பதவியில் இதுவரை முத்துசாமி, வள்ளிமுத்து, நாவலர் நெடுஞ்செழியன், பொன்னையன், புலவர் புலமைப்பித்தன் ஆகியோர் இருந்தனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு மதுசூதனன் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 14 ஆண்டுகளாக மதுசூதனன் தலைவராக இருந்து வந்த நிலையில், உடல்நல குறைவால் நேற்று முன்தினம் காலமானார். எனவே இந்த பதவி அதிமுகவில் அடுத்து யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
எம்ஜிஆர் காலம் முதலே கட்சியில் மூத்த தலைவர்கள் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தற்போது அதிமுகவில் மூத்த தலைவர்கள் அவைத்தலைவராக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் தனபால், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், வரகூர் அருணாச்சலம், தமிழ்மகன் உசேன் ஆகியோரில் ஒருவர் அவைத் தலைவராகலாம் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.