ஒவ்வொரு கிராமத்திலும் மது ஒழிப்பு மகளிர் குழு!...தென்னிந்திய மாநிலங்களிலும் விசிக மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறும் - திருமாவளவன்!
Anti alcohol womens group in every Village special alcohol and drug anti alcohol womens conference to be held in south indian states thirumavalavan
ஒவ்வொரு கிராமத்திலும் மது ஒழிப்பு மகளிர் குழு உருவாக்கப்படும் என்றும், தென்னிந்திய மாநிலங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள சமூக வேலைத்தள பக்கத்தில், ஒவ்வொரு கிராமத்திலும் மது ஒழிப்பு மகளிர் குழு உருவாக்கப்படும் என்றும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற 'மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' மாபெரும் வெற்றி மாநாடாக அமைந்தது. விசிகவின் வெல்லும் சனநாயகம் மாநாட்டையே வெல்லும் மாநாடாக இம்மாநாடு அமைந்தது.
2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இம்மாநாட்டில் பங்கேற்றது கூடுதல் சிறப்பு. மாநாட்டில் பங்கேற்ற மகளிர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்த தோழமை இயக்கங்களின் தலைவர்களுக்கும் குறிப்பாக மகளிர் அணி தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Anti alcohol womens group in every Village special alcohol and drug anti alcohol womens conference to be held in south indian states thirumavalavan