சூடு பிடிக்கும் சட்டமன்ற தேர்தல்!...இந்தியாவில் பட்டினி கொடுமை தலைவிரித்தாடுவதாக அகிலேஷ் யாதவ் தாக்கு! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதிலும், தொகுதி பங்கீட்டினை முடிவு செய்யும் பணிகளிலும்  தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில்,சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துலே பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அகிலேஷ் யாதவ், சத்ரபதி சிவாஜிக்கு சிலை வைப்பதில் பாஜக ஊழல் செய்ததாகவும், இதன் காரணமாக மராட்டிய மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார்.

மேலும், இந்தியாவை உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்றுவோம் என்று பா.ஜ.க கூறியதாக கூறிய அவர், இந்தியாவை விட நமது அண்டை நாடுகள் நன்றாக செயல்படுவதாகவும்,  அண்டை நாடுகளை விட இந்தியாவில் பட்டினி கொடுமை அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டார்.

அண்மையில் கன்சர்ன் ஓல்டுவைட், ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர்லைப் ஆகியவை நடத்திய  பட்டினிக் குறியீட்டின்  கணக்கெடுக்கப்பில் இந்தியா 105வது இடத்தில் உள்ளது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assembly elections will heat up akhilesh yadav attacks that hunger is rampant in india


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->