கோவையில் இரண்டு கல்லூரி மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


கோவையில் இரண்டு கல்லூரி மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவிநாசியைச் சேர்ந்த அவந்திகா (வயது 19) மற்றும் மோனிகா (வயது 19) பகுதி நேரமாக பல்பொருள் அங்காடியில் வேலை செய்து கொண்டே, தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தனர். 

நேற்று மாலை மோனிகா அவந்திகாவின் வீட்டுக்கு சென்றதாக தெரியவருகிறது. பின்னர், நீண்ட நேரமாகியும் அவந்திகாவின் அறை திறக்காததால் சந்தேகமடைந்த அருகிலிருந்தவர்கள் பார்த்தபோது, இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. 

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்கள் மிகுந்த நட்புடன் இருந்து எதிலும் ஒன்றாக செயல்பட்டதாக தெரிய வந்தது. 

மேலும், பெற்றோர் “ஒன்றாக இருந்தால் சரியாக படிக்கமாட்டீர்கள்” என்று கூறியதால், நட்பை பிரிக்கக் கூடும் என்ற பயத்தில் இருவரும் தற்கொலை செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avinasi College girs suicide case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->