மதுவிலக்கை ஆதரிக்கும் பீகார் மாநில மக்கள்! பிரசாத் கிஷோரின் கட்சி மரண தோல்வி! - Seithipunal
Seithipunal


கடந்த நவம்பர் 13 ஆம் தேதி பீகார் மாநிலத்தில் தராரி,ராம்கர், இமாம்கன்ஜ், பெலாகன்ஜ் ஆகிய 4  சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. 

இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், இந்த நான்கு தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி (பாஜக 2) பெற்றுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் பிரபல அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாத் கிஷோரின் 'ஜன் சுராஜ் கட்சி' (மதுக்கடை திறப்போம் என்ற கொள்கையுடன்) முதல் முறையாக களம் இறங்கிய நிலையில், அணைத்து தொகுதியிலும் தோல்வியடைந்துள்ளது.

மற்ற கட்சிகளை விட ஜன் சுராஜ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் வாக்கு வித்தியாசத்திலும் பின் தங்கி படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

இதன் மூலம் அம்மாநில மக்கள் மதுவிலக்கை முழு மனதுடன் வரவேற்று உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar By elections Prashant Kishor BJP Nitish Kumar 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->