அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை!
BJP Annamalai Protest announce AU case DMK
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து அடுத்தகட்ட போராட்டத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.
வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களைச் சந்தித்து, பாஜக மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai Protest announce AU case DMK