#BREAKING || பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு.!
BJP Case registered against 5000 people including leader Annamalai
தமிழக அரசை கண்டித்து தலைமைச் செயலகம் நோக்கி போராட்டம் நடத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21-ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசுகளும் குறிக்கப்பட்டன. இதனையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்காதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக நேற்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக மற்றும் அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
BJP Case registered against 5000 people including leader Annamalai