எங்க அந்த 75 பேர்? என்ன செய்கிறார் CM ஸ்டாலின்? பரபரப்பு கிளப்பிய பாஜக! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பாஜக சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு குடிபெயர்ந்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்பு பிணையில் விடுதலையான 75 வங்கதேசக் குற்றவாளிகள் எங்கே சென்றார்கள், என்ன ஆனார்கள் என யாருக்காவது தெரியுமா? அவர்களைக் கண்காணிக்க வேண்டிய காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை, காவல்துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் அதைப்பற்றிக் கவலையில்லை. 

போலி ஆதாரங்களுடன் இந்தியாவில் தஞ்சமடையும் வெளிநாட்டுக் குற்றவாளிகளுக்கு பிணை ஆணை வழங்கப்பட்டாலும், வழக்கு முடியும் வரை அவர்களை சிறப்பு முகாம்களில் வைத்து கண்காணிக்க வேண்டுமென உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட, வங்கதேச குற்றவாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தத் தவறியது ஏன் முதல்வரே? நீதித்துறையை நீங்கள் மதிக்கும் லட்சணம் இதுதானா?

நமது தேசிய புலனாய்வு முகமையானது(NIA) தமிழகம் முழுவதும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களைத் தேடித் தேடி கைது செய்து வரும் நிலையில், காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எங்கோ பதுங்கியிருக்கும் அக்குற்றவாளிகளால் தமிழக மக்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் பங்கம் விளையுமாயின் அதற்கான முழு பொறுப்பையும் நீங்கள் தான் ஏற்க வேண்டும் முதல்வரே. ஜாக்கிரதை" என்று பாஜக தெரிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP condemn to DMK government thirupur issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->