வசூல் வேட்டை நடத்தி இப்படி பகல் கொள்ளை அடிக்குறாங்களே...! கொந்தளிக்கும் பாஜக எச் ராஜா! - Seithipunal
Seithipunal


சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, வாடகை வரி 18% என வசூல் வேட்டை நடத்தி வரும் திருப்பூர் மாநகராட்சியின் பகல் கொள்ளை அடிப்பதாக, பாஜகவின் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "திமுக இந்த முறை ஆட்சிக்கு வந்த உடன் தொழில் நகரமான திருப்பூரில் திடீரென நூல் விலையை உயர்த்தி ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் தலையில் இடியை இறக்கி தொழிலை முடக்கி திருப்பூரின் பனியன் ஆர்டர்கள் சீனாவை நோக்கியும், பங்களாதேஷை நோக்கியும் மடைமாறிச் செல்ல வழிவகை செய்தது திராவிட மாடல் அரசு. 

கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில அரசின் எந்த உதவியும், ஆதரவும் இல்லாத நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் போராட்டமான வாழ்க்கை என்பது போல வைராக்கியத்தோடு இயங்கி வந்த பனியன் தொழில் நிறுவனங்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும் வகையில் இத்தொழில் இனி இருக்கவே கூடாது என்கிற எண்ணத்தோடு எஞ்சி இருக்கும் பனியன் உற்பத்தி கூடங்களையும் மாநகராட்சி வரி உயர்வு மூலம் இழுத்து மூடி ஒட்டுமொத்த பனியன் ஆர்டர்களையும் அந்நிய நாடுகளுக்கு முற்றிலுமாகச் கொண்டு செல்ல மறைமுகமாக வேலை பார்த்து வரும் திமுகவின் தொழில்விரோத போக்கு கண்டிக்கத்தக்கது. 

மேலும் தொழில் நிறுவனமான திருப்பூரில் குடிநீர் வரி, சொத்துவரி, வாடகைக்கு வரி என வரிக்கொடுமையை சுமத்தி வாழ்விடங்களை விட்டு மக்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றச் செய்யும் சதியோ என சிந்திக்கத் தூண்டுகிறது. 

வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் குடும்பத்தோடு வந்து தங்கி பணிபுரியும் குடும்பங்கள் 18% வாடகை வரி உயர்வால் வீட்டு வாடகை உயரும் போது அவர்களின் வாழ்வாதார நிலை என்னவாகும் என்பது குறித்து சிறிதேனும் சிந்திக்காமல் இப்படியொரு வரி உயர்வை அமல்படுத்தி இருக்கும் திமுக அரசையும், திருப்பூர் மாநகராட்சியையும் என்னசொல்லி கண்டிப்பதென்றே தெரியவில்லை. 

வழக்கமாக தொழில்துறையை முடக்கும் வேலையை அழிக்கும் வேலையை கம்யூனிஸ்ட்கள் தான் செய்வார்கள் அதை தற்போது திமுக செய்து வருகிறது. 

கம்யூனிஸ மற்றும் திராவிட இயக்கங்களின் தலைவர்கள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அவ்விரு இயக்கங்களின் அடிப்படை குணம் "அழிவுவாதமே"

திருப்பூர் மாநகராட்சியின் வரி உயர்வு அறிவிப்பை எதிர்த்து ஜனநாயக அறப்போட்டத்தை திருப்பூர் மாநகராட்சி மாமன்றத்தில் தொடங்கியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், அன்புச் சகோதரர்கள் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் காடேஸ்வரா திரு.S.தங்கராஜ் மற்றும் பாஜக மாவட்ட பொருளாளர் திரு.குணசேகர் ஆகிய இருவருக்கும் தமிழநாடு பாஜக சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று எச் ராஜா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP H Raja Condemn to DMK Govt Thiruppur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->