#தமிழகம் | காட்டு பன்றி விவகாரம் - களத்தில் இறங்கிய பாஜக! - Seithipunal
Seithipunal


வனவிலங்கு தொல்லையை கட்டுப்படுத்தி விவசாயத்தை,விவசாயிகளை காக்க வேண்டும் என்று, மத்திய வனத்துறை அமைச்சரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

நேற்று(08.10.2022) கோவை வருகைபுரிந்த மத்திய வனத்துறை அமைச்சர் குபேந்திர யாதவிடம், தமிழக விவசாய சங்க தலைவர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர்.

அதில் மேற்குத்தொடர்ச்சி மலையை  ஒட்டிய தொண்டாமுத்தூர், காரமடை,பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாயநிலங்களை காட்டுப்பன்றிகள்,யானைகள் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.

யானைகளால் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.எனவே காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதியளிக்க வேண்டுமென்று கோரப்பட்டது. 

அதற்கு விளக்கமளித்த மத்திய வனத்துறை அமைச்சர் மத்தியஅரசு வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்பு குறித்தும்,அதற்கான இழப்பீடுகள் குறித்தும் தெளிவான வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறது.

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு முடிவெடுக்கலாம். கேரளஅரசு பஞ்சாயத்து அளவில் முடிவெடுத்து காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தி வருகிறது. 

எனவே தமிழக அரசு மத்திய அரசின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்ற உரிய அறிவுறுத்தலை மத்திய அரசு செய்யும் என்றார்.

மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதலை தமிழில் பிரதியெடுத்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று பாஜக விவசாய அணியிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பாஜக விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ்,விவசாய அணி மாநில செயலாளர் விஜயகுமார், விவசாய அணி மாவட்ட தலைவர் வசந்த சேனன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP kovai GKNagaraj farmers issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->