சிதம்பரத்தில் பானை உடைக்கப்படுவது உறுதி.. அன்புமணி ராமதாஸ் பேச்சு.!!
Chidambaram thirumavalavan loss karthiyayini won
இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தேசிய ஜனநாயக கூட்டணி இடம் பெற்றுள்ளது பாமக. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கார்த்தியாயினியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கூறுகிறார் கர்நாடக முதலமைச்சர் சீத்தராமையா. இண்டியா கூட்டணியில் உள்ள முக. ஸ்டாலின்னும், திருமாவளவனும் மேகதாது அணை குறித்தே வாயே திறக்கவில்லை. சிதம்பரம் தொகுதி எம்.பி ஆன திருமாவளவன் ஏதாவது தொகுதி மக்களுக்கு பணி செய்துள்ளாரா? வீராணம் ஏரி இன்னும் தூர்வாட படவில்லை அதற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருவது பாமக , பாளையங்கோட்டை நிலக்கரி திட்டத்தை தடுத்து நிறுத்தியது பாமக.
கடலூர் மாவட்டத்தில் பாமக இல்லை என்றால், அனைத்து இயற்கை வளங்களையும் திமுக, அதிமுகவும் சேர்ந்த அழித்து நாசமாக்கி இருப்பார்கள். 2026ல் திமுக,அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று கூறினார்.
English Summary
Chidambaram thirumavalavan loss karthiyayini won