தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் & நிதியுதவி! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தாக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானையின் பாகன்  உதயகுமார் மற்றும் அவருடன் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் 18-11-2024 அன்று பணியில் இருந்துள்ளனர்.

யானையின் அருகில் இருந்தபோது யானை திடீரென திமிறி அருகில் இருந்த பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி வீசித் தாக்கியுள்ளது. 

இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். பாகன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில்,இருவரின் மரண செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தாகவும், இச்சம்பவத்தில் உயிரிழந்த உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த ஆறுதலையும் இரங்கலையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . 

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin Condolence to Thirchendur Elephant pakan death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->