இன்னும் ஒரு மணி நேரத்தில் வரப்போகும் தீர்ப்பு - ஓபிஎஸ் vs இபிஎஸ்!
Devar Statue Gold issue ADMK OPS vs EPS
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையின் தங்கக் கவசத்தை, எந்த தரப்பிடம் (ஓபிஎஸ்-இபிஎஸ்) ஒப்படைப்பது என்பது குறித்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பகல் 3 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவாலயத்தில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு, ஆண்டுதோறும் நடக்கும் குருபூஜையன்று, அதிமுக சாா்பில் தங்கக் கவசம் அணிவிப்பது வழக்கம்.

இந்த தங்க கவசம் தனியார் வங்கியில் வைத்து பாதிக்கப்பட்டு வருகிறது. குருபூஜையின் போது, இந்த தங்கக் கவசத்தை அதிமுகவின் பொருளாளர் கையொப்பமிட்டு பெறுவது வழக்கம்.
இந்த முறை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் உரிமை கோரி வங்கியில் விண்ணப்பித்துள்ளார்.
அதே சமயத்தில், ஓபிஎஸ் தரப்பில் இருந்தும் விண்ணப்பம் கொடுக்கப்பட்டதால் வாங்கி நிர்வாகம் எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதனையடுத்து, இந்த பிரச்னைக்குத் தீர்வு காண எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
English Summary
Devar Statue Gold issue ADMK OPS vs EPS