ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 17ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கும் தி.மு.க...! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கில் 02-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 2021 முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் 02 முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை ஆளும் தி.மு.க.வே களம் இறங்குகிறது.

அ.தி.மு.க, பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் சார்பில் மா.கி. சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.

 

இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையை தி.மு.க. நேற்று தொடங்கியது. இதன்படி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தி.மு.க. வினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அதில் 04 வார்டுகளில் நாங்கள் வாக்கு கேட்டு முடித்துள்ளோம்.அங்கு தி.மு.க.வுக்கு அனைத்து மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். நாளை மறுநாள் பகல் 12 மணிக்கு தி.மு.க.வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் செய்வார்" என்று அவர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK to file nominations on the 17th


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->