நீட் விலக்கு சட்டம்: அவசரமாக சட்டப்பேரவையைக் கூட்டி மீண்டும் நிறைவேற்றி திருப்பி அனுப்ப வேண்டும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


அவசரமாக சட்டப்பேரவையைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சற்றுமுன் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் சட்டத்தை ஆளுனர் திருப்பி அனுப்பியிருப்பது துரதிருஷ்டவசமானது.  நீட் விலக்கு சட்டத்தை திருப்பி அனுப்புவதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி ஆளுனர் கூறியுள்ள காரணங்கள் தேவையற்றவை.

நீட் விலக்கு சட்டம் தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்று ஆளுனர் கருத்து தெரிவித்திருப்பது  ஏற்றுக்கொள்ள முடியாதது.  ஆளுனரின் நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. எந்த அடிப்படையில் அந்த முடிவுக்கு வந்தார் என்பது தெரியவில்லை.

நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தால், நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்துகள், தமிழ்நாடு நீட் விலக்கு சட்டத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. அதனால், நீட்விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு தான் ஆளுனர் அனுப்பியிருக்க வேண்டும்.

நீட் விலக்கு சட்டம் ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், இனியும் சர்ச்சைகளும், தாமதங்களும் ஏற்படுவதைத் தடுக்க, சட்டப்பேரவையை அவசரமாக கூட்டி, திருத்தங்களுடனோ, திருத்தமின்றியோ சட்டத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

திருப்பி அனுப்பப்படும் நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவரிடமும் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்." என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Neet issue feb


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->