பயந்திட்டியா குமாரு? போட்டு தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


சேலம் : அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, "அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மூன்று தலைவர்களும் மக்களுக்காக உழைத்தார்கள். நல்ல உயிரோட்டம் உள்ள திட்டங்களை வழங்கினார்கள். இதன் காரணமாகவே அவர்கள் மறைந்த பின்னரும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கியதால் தான், அதிமுக இன்று ஒரு மக்கள் இயக்கமாக மக்கள் மனிதில் நிலைத்துக் கொண்டிருக்கிறது. 

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக காணாமல் போய்விடும் என்று கருணாநிதி கனவு கண்டார். அதை முறியடித்து 1991 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர வைத்தார் புரட்சித்தலைவி ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக ஆட்சியை அகற்ற ஸ்டாலின் கனவு கண்டார். ஆனால், நான்கரை ஆண்டுகள் சிறப்பான முறையில் ஆட்சியை நான் நடத்தினேன்.

நான் முதலமைச்சராக இருந்தபோது யார் போராட்டத்திற்கு அனுமதி கேட்டாலும் அனுமதி வழங்கினேன். அதுதான் ஜனநாயக உரிமை. ஆனால் தற்போது அதிமுக ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்றால், காவல்துறையை ஏவி விட்டு அனுமதியை மறுக்கிறது இந்த திமுக அரசு.

அதிமுக நடத்திய ஒரு போராட்டத்திற்கே இந்த திமுக அரசு பயந்துவிட்டது. மக்களைப் பற்றி கவலை இல்லாத இந்த திமுக அரசு, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி எதையும் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. நான் சொன்ன திமுகவின் நான்கு முதலமைச்சர்களுக்கே இந்த நாடு தாங்கவில்லை. இன்னும் நிறைய பேர் என்றால் நாமெல்லாம் வெளிநாட்டிற்கு தான் செல்ல வேண்டும்.

நான் தற்காலிக தலைவர் என்று சொல்கிறார் ஸ்டாலின், கருணாநிதி இருக்கும்போது அக்கட்சியின் செயல் தலைவராக ஸ்டாலின் இருந்தார் என்பதை மறந்து விட வேண்டாம். எங்களைப் பற்றி குறை கூறுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi K palanisami Say About DMK govt Stalin Era


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->