டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி..! காரணம் என்ன..?
Edappadi Palaniswami met Union Home Minister Amit Shah in Delhi
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது அ.தி.மு.க., மூத்த தலைவர்கள், எம்.பி.,க்கள் உடன் இருந்தனர்.
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் எந்த கட்சிகள் யாருடன் கூட்டணி என்பது பற்றிய கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க., தற்போதுள்ள கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வின் கூட்டணி குறித்த கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், இரவு 8 மணியளவில் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் இ.பி.எஸ்., சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் முக்கியமானவர்கள் யாரையும் சந்திக்க வரவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் அமித்ஷாவை சந்தித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் அமித்ஷா உடனான் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
English Summary
Edappadi Palaniswami met Union Home Minister Amit Shah in Delhi