திடீர் திருப்பம்... ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு... முந்திக் கொண்ட முக்கிய தலைவர்..!!
Erode By Election Candidate Announcement
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா காலமானதால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. பல முக்கிய அரசியல் கட்சிகள் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.
கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் அச்சங்கத்தின் தலைவர் செல்ல பாண்டியன் தனது கழுத்தில் பல தாலி கயிறுடன் வந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் மது குடிப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டு பலரது குடும்பம் பாதிக்கப்பட்டதை வலியுறுத்துவதற்காக இவ்வாறு தாலியுடன் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ததாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவித்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த எம்.எஸ் ஆறுமுகம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகை இல்லாததால் டாஸ்மாக் கடைகளில் வெளியே இருக்கும் காலி பாட்டில்களை பொறுக்கி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் "காலி பாட்டில்கள் தான் எங்கள் நிதி; டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தான் எங்கள் கதி" என்ற முழுக்கத்தோடு தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
Erode By Election Candidate Announcement